மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வழிபாடு முறை குறிப்புகள்:

1. கோவிலுக்குள் தண்ணீர் ஊற்றுபவர்கள் அவரவர் தனது வீட்டில் இருந்து முதல்குடம் தண்ணீர் கொண்டு வர வேண்டுகிறேம்.


2. அதில் மஞ்சள்பொடி, வாசனைபொடி, வேப்பிலை போட்டு வருவது நல்லது.


3. கொடி மரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும்பொழுது அதன் கீழே உட்கார்ந்து தலையை விரித்து தண்ணீரை தலையில் வாங்கக் கூடாது.


4. சுமங்கலிகள், குழந்தைகள் தான் மஞ்சள் நீர் ஊற்ற வேண்டும்.


5. பலிபீடம், கொடிமரம் தவிர மூலஸ்தானத்தில் கண்டிப்பாக நீர் ஊற்றக்கூடாது.


6. கோவிலில் பெண்கள் தண்ணீர் ஊற்றும் நேரம் இரவு 10மணி முதல் காலை 6மணி வரை ஆண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது.


7. அங்க பிரதட்சணம் செய்பவர்கள் பொங்கல் அன்று தான் உருள வேண்டும் என்பது இல்லை கொடியேற்றியது முதல் இறங்குவது வரை செய்யலாம்.


8. மாவிளக்கு எடுக்கும் பொழுது கோவிலில் வெறும் தரையில் படுத்து தான் எடுக்க வேண்டும்.


9. கோவிலுக்குள் தேங்காய்சிரட்டை, வாழைப்பழத்தோல் மற்றும் குப்பைகூளங்கள் போடக்கூடாது.


10. கோவில் சுவற்றில் குங்குமத்தாலோ, எண்ணெய்யாலோ, சுலாயுதம், நாமம் வரையக்கூடாது.


11. அம்மனை தரிசிக்க வருபவர்கள் தங்களால் முடிந்த அளவு பூ, எலுமிச்சம் பழம், மாலை, நெய், எண்ணெய் கொண்டு வரலாம்.


12. உப்பு, மிளகு போடுபவர்கள் அதற்கு உண்டான தொட்டியில் தான் போடவேண்டும்.


13. விபூதியை பூசி விட்டு மீதியை உண்டியலில் போட வேண்டாம்.


14. நகைகள், பணம், பர்ஸ், குழந்தைகள் மிக மிக கவனம்.


15. ஆண்கள், பெண்கள் அவரவருக்கு உண்டான வரிசையில் தான் செல்ல வேண்டும்.


16. தீர்த்தம், மஞ்சள், குங்குமம் எடுத்தவர்கள் உடனே அடுத்தவர்களுக்கு எடுக்க வழி விட வேண்டும்.


17. தேங்காய் உடைப்பவர்கள் சீட்டு வாங்க வேண்டும்.


18. வீட்டிற்கு தீர்த்தம் எடுப்பவர்கள் பூசாரி வசம் விபூதி போட்டுக் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.


19. கோவிலுக்குள் எந்த இடத்திலும் சூடம் கொளுத்தக்கூடாது.


20. கேந்திப்பூ வைத்து கட்டிய மாலைகள் சுவாமிக்கு சாத்தக்கூடாது.


21. காணிக்கைகளை உண்டியலில் போடவும்.


22. விரத நாள் பூர்த்தியான பின்பு தான் சட்டி எடுக்கவேண்டும்.


23. பொங்கல் அன்று ஞாயிற்றுகிழமை இரவு 8மணிக்கு அடுப்பு அக்கினி பூஜை முடிந்த பின்பு தான் சட்டி செலுத்த வேண்டும்.